நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா !

Saturday, May 8th, 2021

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம மருத்துவமனையில் 8 தாதியர், கராபிட்டி மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

தற்போது அதிகரித்துள்ள கொவிட் தொற்று காரணமாக குறைந்த ஓய்வு கொண்ட மேலதிக வேலை நேரத்தில் பணிபுரிய தங்கள் உறுப்பினர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: