நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயார் : அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம்!

Sunday, July 10th, 2016

அரச மருந்தாக்கல் கூட்டுதாபனமானது எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது.

சுகாதார செவிலியர்கள், துணை வைத்திய சேவையாளர்கள் மற்றும் ஏனைய சேவையாளர்களுக்கு வழங்கும் பணிப்படியை தங்களுக்கு வழங்குமாறு கோரியே குறித்த வேலை நிறுத்ததை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 13 ஆம் திகதி மற்றும் 14 ஆம் திகதிகளில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளும்  அதேவேளை, அதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் 20 ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தை  தொடரவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் ஊடக பேச்சாளரான எம்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.

Related posts: