நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான பற் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு !

Sunday, June 10th, 2018

நாடெங்கிம் உள்ள பாடசாலை மாணவர்களின் பற்கள் மற்றும் வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதற்காக அனைத்து கல்வி வலயப் பிரதேசங்களிலும் விசேட பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கான பற்சிகிச்சைப் பிரிவுகளும் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளதாக சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மாணவர்களின் பற்கள் மற்றும் வாய்ச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக நாடெங்கும் 353 மாணவர்களுக்கான பற்சிகிச்சை நிலையங்கள் இருக்கின்ற போதிலும் பெரும்பாலான சிகிச்சை நிலையங்கள் பல் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கான மருத்துவ வசதி இல்லாத நிலையிலேயே உள்ளதாகவும் இந்தச் சிகிச்சை நிலையங்களுக்கு வேண்டிய பல் மருத்துவர்களையும் அனைத்து பற்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்து வகைகளையும் வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை பிரதேசங்களில் மேலதிக பற்சிகிச்சை நிலையங்களை ஆரம்பிப்பதற்கும் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது பற்றி சுகாதார அமைச்சர் கல்வி அமைச்சருடனும் அரச மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் அண்மையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் இதற்கேற்ப நாடெங்குமுள்ள அனைத்து மாணவர்களுக்கான பற்சிகிச்சை நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளதுடன் புதிய பற்சிகிச்சை நிலையங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி சுனில் ஜயசிங்க ஊடகத்தரப்புக்குத் தெரிவித்தார்.

Related posts: