நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, May 4th, 2021

நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நாளாந்தம் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து, இந்த தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொவிட்−19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்துடன் இணைந்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் அரசியல் தலையீடுகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: