நாடளாவிய ரீதியில் தேசிய சட்டவாரம் அனுஷ்டிப்பு!

Monday, February 20th, 2017

எதிர்வரும் 27 ஆம் திகதி  முதல் மார்ச் 4 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் தேசிய சட்டவாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. நாடெங்கிலும் இருந்து 1000இற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டவாரம் என்ற திட்டம் முன்னாள் நீதிபதி சீ .ஜீ. வீரமந்திரியினால் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது . 2006 இலி ருந்து ஆண்டு தோறும் இந்த சட்டவாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது . இதன்நோக்கம் சட்டரீதியான உதவிகள் வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதேயாகும்.

இந்த வாரத்தில் சட்டத்துறை வல்லுனர்கள் உரையாற்ற இருப்பதோடு தினசரி வாழ்வில் மக்களை சார்ந்த சட்டங்களின் அணுகு முறை பற்றியும் விளக்கமளிக்க உள்ளார்கள் . முக்கிய நிகழ்வும் கண்காட்சியும் கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறும் . இங்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும் . ஜனாதிபதி சிறிசேன , பிரதமர் ரணில் , நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்தத் தினத்தில் வருகைதர உள்ளார்கள் .இதையொத்த நிகழ்வுகள் சிலாபம் ,பதுளை , குருநால், பலப்பிட்டிய , இரத்னபுரி , யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன . யாழ்ப்பாணத்தில் மார்ச் 4 ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறும் . இந்த நிகழ்வுகளில் பங்கு கொள்ள விரும்புவோர் 0113 133 864 ,  0113 133 872. என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம் .

1_1997010f

Related posts: