நாடளாவிய ரீதியில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, May 4th, 2021

‘வெற்றி கொள்வோம்’  என்னும் தொனிப்பொரளில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை அமைப்பதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

உற்சாகமான வாழ்க்கை முறைக்கு இளைஞர் பரம்பரையை பழக்கப்படுத்துவதற்காகவும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கான உந்துதலை வழங்கும் நோக்கில் ‘வெற்றி கொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு 625 மில்லியன்களாவதுடன், திட்டத்தின் மூலம் வருடாந்தம் 100 ஆயிரம் பொதுமக்களுக்கும் 5 ஆயிரம் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் நன்மையடைவார்கடிளன்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

அதேநேரம் குறித்த தேக ஆரோக்கிய நிலையங்களைக் கொண்டு நடத்தும் பொறுப்பை பிரதேச ரீதியாக இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒப்படைப்பதற்கும், குறைந்தது ஒரு பயிற்றுவிப்பாளரை ஈடுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 2021 – 2022 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும், 2021 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 250 இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை நிர்மாணிப்பதற்காகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: