நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் – நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என சுகாதார அமைச்சு!

Sunday, November 21st, 2021

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டுவரும் நிலையில் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்று உறுதியானாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: