நாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு!

Tuesday, August 23rd, 2016

தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்துக்கு அமைவாக நேற்று நாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் போது 131 பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 3,212 உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார். இந்த நடவடிக்கைகளில் 1,800 இற்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்றுள்ளனர். மென்பான வகைகளின் சீனியின் அளவு மற்றும் உணவகங்களில் உள்ள உணவுகளின் தரம்குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்கள் நிறுத்தப்படும் உணவகங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts:

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!
"மேட் இன் ஸ்ரீலங்கா" உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலிய...
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச...