நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா நோயின் தாக்கம் தீவிரம்

Thursday, April 13th, 2017

நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதாகவும், இந்நோய்த் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் தமக்கான பாதுகாப்பை உரிய முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என்றும் மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டிக் காட்டியுள்ளனர்.

இந்நோய் ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தில் முதலில் காய்ச்சல், தடிமன், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட தாக்கங்கள் முன் அறிகுறியாக இருக்குமெனவும், பின்னர் படிப்படியாக நோய் அதிகரித்து பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி அண்மைய நாட்களாக உயிரிழப்பு சம்பவங்களும் ஆங்காங்கு சம்பவித்தும் வருகின்றன. எதிர்காலத்தில் இந்நோயின் தாக்கம் தீவிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன.
இன்புளுவென்ஸா மட்டுமன்றி டெங்கு நோயும் மக்களை மோசமாக தாக்கிவரும் நிலையில் மக்கள் இவ்வாறான நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின கட்டாயமாகவுமுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்நோய்த் தாக்கங்கள் அதிகளவில் குழந்தைகளையும், சிறுவர்களையும் மட்டுல்லாது கர்ப்பிணிகளையும் விரைவில் தாக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாலும், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்தம் பொருட்டு உடனடியாக வைத்திய ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் தவறாது பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் மருத்துவத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே மக்கள் தாம் வாழும் வீட்டையும், சூழவுள்ள பகுதிகளையும் முடியுமானவரையில் சுத்தமாக வைத்திருப்பதனூடாக எதிர்காலங்களில் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென்றும், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையினருக்கு முடியுமானவரையில் தமது பங்ளிப்பையும் வழங்கி நோயற்ற சமுதாயமாக கட்டியெழுப்புவதற்கு எல்லோரும் திடசங்கற்பம் பூண வேண்டியது காலத்தின் பணியென்றும் மருத்துவத்துறையினர் சுட்டிக்கட்டியுள்ளனர்.

Related posts: