நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக்கிரியைகள் இன்று!

Friday, December 22nd, 2017

யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தமிழ் அராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அருகே இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

தமிழ் ஆராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கும் கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் விகாராதிபதியின் உடலைத்தகனம் செய்யத்தீர்மானிக்கப்பட்டள்ளது. இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சித்திணைக்களத்துக்குச் சொந்தமானது. அங்கு தகனம் செய்ய கொழும்பு அரசு அனுமதி வழங்கயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனின்றி முன்தினம் உயிரிளந்தார். அவரது உடல் உலங்கு வானூர்தி மூலம் நேற்று யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது. நாகவிகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்ப்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts: