நஸ்டத்தில் இயங்கும் தபால் திணைக்கம் – வெளியானது மத்திய வங்கி அறிக்கை!
Monday, May 22nd, 20232022ஆம் ஆண்டில் தபால் திணைக்களத்திற்கு 7 பில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தபால் திணைக்களத்தின் வருமானம் 29.6 வீதத்தால் 9.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், செயற்பாட்டுச் செலவுகளும் 15.3 வீதத்தால் அதிகரித்துள்ளன.
2021 ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் 7.2 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது. எனினும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தின் நட்டம் சற்று குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு கட்டணம், உள்நாட்டு தபால் கட்டணம், வெளிநாட்டு தபால் கட்டணம், மற்றும் பிற தபால் சேவைகள் தொடர்பான பல கட்டணங்கள் அதிகரித்த போதிலும்,
தபால் திணைக்களத்தின் நிதி நிலைமை பலவீனமான மட்டத்திலேயே காணப்படுவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, தபால் கட்டணங்களை முறையான திருத்தம், தபால் சேவைகளை தன்னியக்கமாக்குதல், சேவைகளை பல்வகைப்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அமைப்பு தபால் திணைக்களத்திற்கு அவசியமானது என மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|