நவீன உயிர் எரிசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம்!

மின்வலு மற்றும் புதுபிக்கக் கூடிய எரிசக்தி அமைச்சின் நிலைபேறான அபிவிருத்தி அதிகார சபை நிலைபேறான உயிர் திணிவு எரிசக்தி மற்றும் நவீன உயிர் எரிசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உலக சுற்றாடல் வசதியளிப்பு முன்முயற்சியின் கீழ் கிடைத்த நிதியுதவியையும் ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய திட்டம் – அபிவிருத்தி திட்டப் பிரிவு ஆகிய முகவராண்மைகள் வழங்கிய உதவிகளையும் பயன்படுத்தி இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்கீழ் ஹோமாகம நகரில் நிர்மாணிக்கப்பட்ட உயிர் திணவு முனையத்தை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா நேற்று திறந்துவைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர் திணிவு பொருட்கள் மூலமாக மின்வலுவை உற்பத்தி செய்து பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை குறைப்பது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று தெரிவித்தார்
Related posts:
|
|