நவம்பர் 28 தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!
Friday, November 25th, 2016மக்களின் நலன்கருதி அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 28ம் திகதி ஆரம்பமாகின்றது என சுகாதாரசேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இந்த தேசிய உணவுப்பாதுகாப்பு வாரத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதாரசேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தில், உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறிக்கும் வர்ண அடையாள குறியீட்டு முறை அடங்கியுள்ளதா? என்பது தீவிரமாக பரிசோதிக்கப்படும். எதிர்காலத்தில் உணவுப் பொருட்களுக்காகவும் வர்ண குறியீட்டு முறை அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். தூரதேச பயணசேவைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகள் நிறுத்தப்படுகின்ற சிற்றூண்டிச்சாலைகள், பாடசாலை சிற்றூண்டிச்சாலைகள் போன்றன இதன்போது சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இதய நோயாளர்களுக்கு மருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டம்!
லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்!
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின...
|
|
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்...
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் டி.வி.சா...
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு: பிரச்சினைக்கு நாளை தீர்வு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்ப...