நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்த​ல்?

Wednesday, September 18th, 2019

ஜனாதிபதித் தேர்த​ல் தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (18) வெளியாகுமென, அரச அச்சகக் கூட்டுத்தாபனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு வெளியிடப்படுவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான முழு அதிகாரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு பொறுப்பளிக்கப்பட்டு உள்ளது என்பதால், வேட்பு மனுக்கோரல், வாக்களிப்புத் திகதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்தல், எந்நேரத்திலும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகுமென அறியமுடிகின்றது.

அதனடிப்படையில், ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, நவம்பர் 16ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறுமென அறியமுடிகின்றது.

Related posts: