நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதிமுதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்பதாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையும் அதற்கு அடுத்தநாள் உயர்தர பரீட்சையும் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டபோதிலும் அந்த திகதியில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சை நடத்தும் திகதி தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நவம்பர் மாதம் 14 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் உயர்தர பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதிமுதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்’ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|