நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைப்பு!

Friday, May 31st, 2024


……
இன்று (31) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாயாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாயாக இருக்கும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கு சமாந்தரமாக ஏனைய எரிபொருள் விற்பனை முகவர்களான லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சைனோபெக் ஆகியனவும் தமது எரிபொருட்களில் விலைகளை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: