நல்லைக் கந்தனின் மஹோற்சவம் நாளை ஆராம்பம்!
Sunday, August 7th, 2016வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில், சம்பிரதாய முறைப்படி கொடிச்சீலை ஆலயத்திற்கு எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். நல்லூரிலுள்ள செங்குந்தா மரபினர் வருடா வருடம் இக் கொடிச் சீலையை வழங்கி வருவார்கள்.
இதன்படி குறித்த மரபினரது இல்லத்திலிருந்து கொடிச்சீலை யாழ் சட்டநாதர் சிவன் கோயிலுக்கு கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு அங்கிருந்து திருவூர்தி மூலம் காலை 10.00 மணியளவில் நல்லார் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளி வீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறும் கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத் திருவிழா ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|