நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Thursday, January 24th, 2019

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளை கொட்டுவோரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இப் பகுதிகளில் வீடுகள், கடைகளில் தேங்கும் கழிவுப் பொருள்களை இரவு வேளைகளில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரியளவில் இடையூறுகளை எதிர்நோக்குகின்றனர்.

எனவே குப்பை கொட்டுவோர் நல்லூர் பிரதேச சபையினால் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளில் போடுமாறு கேட்கப்படுகின்றனர். இதனை விடுத்து பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோர் இனம்காணப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் வாகனங்களில் குப்பைகளை கொட்டுவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஒழுக்க விதிகளை மதித்து குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: