நல்லூர் பெருந்திருவிழாவில் எல்லையிட்ட பகுதிக்குள் வர்த்தகத்துக்குத் தடை!
Sunday, August 19th, 2018யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் சேலைகளால் வேலியமைக்கப்பட்ட பகுதிக்குள் கற்பூர விற்பனை, ஏனைய நடமாடும் விற்பனைச் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. வீதிகளுக்கு இடையே நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள். நல்லூர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் எந்தக் கடைகளும் அமைக்கப்படக் கூடாது. தற்போது அமைக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் அகற்றப்படும்.
யாழ் மாநகர சபையால் எட்டப்பட்ட இந்த முடிவுகளுக்கு அமைய அவற்றை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட பொலிஸ் குழு அமைக்கப்படும். கிடைக்கும் முறைப்பாட்டை இந்தக் குழு விசாரணை செய்யும். அனுமதி பெறப்படாத கடைகளையும் இந்தக் குழு அகற்றும்.
Related posts:
நாம் தோற்கவில்லை – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்!
யாழ்ப்பாணத்தில் இன்று கூடியது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு – மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வு!
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு - அடுத்த ஆண்டுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் சூரிய கலங்களை பொருத்த நட...
|
|