நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மறுப்பு தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022

நல்லூர் பிரதேச சபையின் 22.05.2022 ஆம் திகதியன்று நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குற்றம்சுமத்தியுள்ள குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அவ்வாறானதொரு தீர்மானம் ஏகமதாக நிறைவேற்றப்பாடவில்லை என்றும் வெளியான குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதெனவும் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் உண்மையில் இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே குறித்த தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன்  இவ்விடயத்தில் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாதெனவும் அவ்வாறானதொரு உண்மைக்கு புறம்பானதென செய்தியை தாம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு வீராங்கனைகளின் பெற்றோர் மூன்று நாள்கள் அவகாசம்
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...