நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிப்பு – பதவி இழக்கிறார் தவிசாளர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்
முன்பதாக நல்லூர் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் கடந்த நவம்பர் 24ஆம் திகதி சபைக்கு வந்த வேளை தோல்வியடைந்தத நிலையில் நேற்று மீள சபையில் சமர்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 04 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவது தடவையாகவும் பாதீடு தோற்கடிக்கப்பட்டடை தொடர்ந்து உள்ளூராட்சி மற்றங்களின் சட்டவரைபுகளுக்கமைய சபையின் தவிசாளர் தோல்விகண்டவராக கருதப்படுவதுடன் அவரது ஆட்சியில் மாற்றம் ஏற்படவாய்ப்பள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|