நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளன: பிரதேச சபையின் செயலாளர் தெரிவிப்பு

Tuesday, March 8th, 2016

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கோண்டாவில் வடமேற்குப் பாடசாலை வீதி, கோண்டாவில் தென் மேற்குப் புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மத்தி காரைக் கால் தோட்டப் பகுதி, கோண்டாவில் மத்தி சோளன் தோட்டப் பகுதி, கோண்டாவில் மத்தி எம்.எஸ். வீதி, கோண்டாவில் மத்தி செபஸ்தியார் வீதி, நவரட்ணராஜா வீதி, காரைக்கால் இந்து மயான வீதி, கோண்டாவில் வடகிழக்கு கலைவாணி மில் லேன், கோண்டாவில் வடகிழக்குக் காளி கோயில் வீதி, கோண்டாவில் வடகிழக்கு வாமஸ் வீதி, கோண்டாவில் வடகிழக்குக் கட்டுக் காட்டு வீதி, கோண்டாவில் வடகிழக்குக் கோகுல வீதி, கோண்டாவில் வடகிழக்கு ஞானவீர வைரவர் ஆலயப் பகுதி ஆகிய இடங்களிலும், வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகளில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகளும்   முற்றாக அழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

Related posts:

வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
விசேட தேவைகளுக்காக 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் - மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மைய...