நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!

நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்
யாழப்பாணம் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் நீதிபதி இளஞ்செழியனின் இரண்டு மெய்ப் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் யாழப்பாணம் போதனாமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகம் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் வைத்து கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!
தேசிய பாடசாலைகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு!
19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு : 20 ஆவது திருத்தம் நிறைவேறும் – அதனால் தேசிய பாதுகாப்பிற்கு...
|
|