நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும் – சாதித்துக் காட்டுவார் டக்ளஸ் தேவானந்தா என்கிறார் இரா. செல்வவடிவேல்!
Thursday, July 9th, 2020இம்முறை நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும். ஆடி அமாவாசைக்கு கடலினுள் இறங்கி மதச் சடங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது போன்று இதையும் எமது தலைவர் சாதித்துக் காட்டுவார் என்று சொஞ்சொற் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்துள்ளார் –
அரியாலைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.
இது தொடர்ந்து அவர் கூறுகையில் –
சுகாதார தரப்பினரது நடைமுறைகளால் தடைப்பட்டுப்போகுமோ என்ற அச்ச நிலையில் இருந்த தந்தையர்களுக்கு பிதிர்க்கடன் மேற்கொள்ள இருந்த உறவுகள் இன்று அமைச்சரின் முயற்சியால் நிம்மதி பெற்றுள்ளனர்.
அதேபோன்று சில வாரங்களுக்கு முன்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தடைகளுக்கும் தளர்வுகளை பெற்றுக்கொடுத்து பக்கதர்களின் அபிலாசைகளை நிறைவுசெய்து கொடுத்திருந்தார்.
இத்தகைய ஒரு நிலையில் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனது உற்சவமும் ஆரம்பமாக உள்ள நிலையில் அடியவர்கள் மனதில் ஒரு குழப்ப நிலை காணப்படுகின்றது.
ஆனால் எமது மக்களின் மன உணர்வுகளை என்றும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் மக்கள் சேவை செய்துவரும் எமது தலைவர் நல்லூர் திருவிழா சிறப்பாக நடப்பதற்கான ஒழுங்ககளையும் உருவாக்கி காட்டுவார் என்றார்.
Related posts:
|
|