நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மஹிந்த பணிப்பு!

Sunday, July 19th, 2020

நல்லூர் கந்தனின் மகோற்ச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்ச பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக, அதிகளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வரு வருடமும் புலம் பெயர் தேசத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் நல்லூரான் மகோற்சபத்தில் , இம்முறை கொரோனா அச்சம் காரணமாக திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மட்டுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் குறைந்தளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மகிந்தவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கையினை பரிசீலனை செய்த பிரதமர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவு பக்கதர்கள் நல்லூர் கந்தன் வருடாந்த திருவிழாவில் பங்கேற்ற வழிசெய்யுமாறு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: