நல்லூர் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்திற்கு பொது மக்கள் அஞ்சலி!

Sunday, July 23rd, 2017

நல்லூர் பகுரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபரி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார். இவர் கடந்த 15 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார்.

இவருடைய உடல் பிரேதபரிசோதனையின் பின் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Related posts: