நல்லூர் கந்தனுக்கு நாளை இரதோற்சவம் – இன்று சப்பரத்தில் உள்ளக வீதியில் அமைதியாக வலம்வந்து அடியவருக்கு நேரலையில் அருள் கொடுத்தார் முருகப்பெருமான்!

Saturday, September 4th, 2021

கொரோனா பெருந்தொற்றின் மத்தியிலும் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டவகையில் அடியவர்களின் அதிகளவான பிரசன்னமின்றி வரையறுக்கப்பட்ட அடியார்களுடன் வரலாற்றுப் புகழ் மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 23ஆம் நாளான சப்பறத் திருவிழா  இன்று இடம்பெற்றது.

முன்பதாக வரலாற்று சிறப்புமிக்க நல்லுர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்தமாதம் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள குறித்த பெருந் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார துறையினரால் நல்லூரானின் வருடாந்த பெருந் திருவிழாவுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் வரையறைகளுடன் பூசைகளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலயத்தின் மிகக் குறைந்தளவான பக்தர்களுடன் கடந்த 23 ஆம் திகதி கெடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தை நாளாந்தம் நேரலையகவே பக்தர்கள் பார்வையிட்டு முருகப்பெருமானின் அருளாசிகளை பெற்று வந்தனர்.

இன்நிலையில் இன்றையதினம் நல்லூரானின் 23 ஆவது நாளான சப்பரத் திருவிழா நடைபெற்றது.

மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் சப்பரத் திருவிழாவின் பூசைகள் நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வலம்வரும் நேரலை மூலம் அடியவர்களுக்கு அருளாசிகளை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் நாளையதினம் தேர்த்திருவிழாவும் நாளைமறுதினம் தீர்த்தத் திருவிழாவும் சுகாதார நடைமுறைக்களுக்கமையவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதி...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரியுங்கள் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்க...
நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...