நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை: இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்து தடை!

Monday, August 5th, 2019

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான போக்குவரத்துக்கள் இன்று முற்பகல் 10 மணியுடன் தடை செய்யப்பட்டு பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக அங்கு கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கான விளக்க அறிவுரைகளைப் பொலிஸ் அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஒளிவடிவத்தில் வழங்கினர்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் உடற் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதுடன், அந்தப் பிரதேசம் முழுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளது.

அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் நேற்றுப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சோதனைக் கூடங்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஆலயச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பொலிஸார் இன்று காலை 10 மணி முதல் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைப் பொலிஸார் மற்றும் மாநகர சபை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்

Related posts: