நல்லூரில் விவரீதம்: தீயினுள் வீழ்ந்த பெண் வைத்தியசாலையில்!

பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்புறத்தில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது – கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் குறித்த பெண் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் வட மாகாணத்தில்!
கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
|
|