நல்லூரில் ஈ.பி.டி.பி. திடசங்கற்பம்!

Monday, March 20th, 2017

உரிமைப் போராட்டத்தினூடாக கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளையும் அதனூடாக பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு, மக்கள்  சக்தியை ஒன்று திரட்டி வருங்காலத்தில் ஜதார்த்த பூர்வமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு உரிமையை வென்றெடுப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் உழைக்கும் என திடசங்கற்பம் கொண்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனின் ஒழுங்கமைப்பில் நேற்றையதினம் (19) நடைபெற்ற வட்டார ரீதியான கட்சி ஆதரவாளர்களுடனான விஷேட கூட்டத்தின்போதே இவ்வாறு திடசங்கற்பம் பூணப்பட்டது.

எமது உரிமைகளை வெற்றிகொள்வதற்காக எமது இனம் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு முகம் கொடுத்திருந்த போதும் அவை அனைத்தும் சிலரது தவறான வழிநடத்தல்களால் இலக்கை எட்டாது கலைந்து சென்றுவிட்டன.

ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் கிடைத்திருந்த குறைந்தளவிலான அரசியல் அதிகாரங்களைக்கொண்டு எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் மக்களுக்கானதாக சரியானதாக பயன்படுத்தியிருக்கின்றோம்.

அரசியல் உரிமைகளுக்கான தீர்வுகளை காண்பதில் பேரம்பேசும் அரசியல் பலத்தை எம்மிடம் மக்கள் வழங்கவார்கள். மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி ஜதார்த்த பூர்வமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு உரிமையை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் உறுதி பூணப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,  ஆகியோருடன் கட்சியின் பிரதேச நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

hh

Related posts: