நல்லிணக்க செயலகத்தின் கால எல்லை நீடிப்பு – அமைச்சர்  தயசிறி ஜயசேகர

Thursday, October 26th, 2017

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக பொது மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தி திட்டமிட்ட வேலைத்திட்டத்தை கவனத்தில் கொண்டு இந்த அலுவலகத்தின் கால எல்லையை 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக பிரதம் ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நல்லிணக்க பொறிமுறைக்கான செயலகம் 2015 ஆம் ஆண்டிலிருந்து 02 வருடங்களுக்கு அமுலாகும் வகையில் (Secratariat for Coordinating Reconciliation Mechanisms – SCRM) ஸ்தாபிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்பு நிறுவனங்கள் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக தரப்பை தொடர்புபடுத்தியும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வசதிகளை செய்து இந்த அலுவலகம் தனது பணியை நிறைவேற்றி வருகின்றது.

Related posts: