நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

Thursday, June 15th, 2017

மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேவை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் விஷேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு மதத்திற்கோ அல்லது மக்களுக்ககோ எதிராக வன்முறையை பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கூறிய பிரதமர், அது குறித்த ஆலோசனைகளை காவற்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: