நல்லிணக்கத்திற்காக உழைத்துவருவது ஈ.பி.டி.பி கட்சிதான் : உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது –  வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Wednesday, August 10th, 2016

இலங்கை மக்களிடையே சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகியன வலுப்படுத்தவேண்டும் என்றும் அதனூடாகவே நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்றும் எமது கட்சியாகிய ஈழமக்கள் ஜனநாயக கட்சிதான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது. இதற்கான உரிமையை இன்று மத்திய அரசுடன் இணக்க அரசியல் செய்து கொண்டிருக்கும் நீங்கள் கொண்டுவந்ததாக கூறுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (9) இடம்பெற்ற வடமாகாண சபையின் 58ஆவது அமர்வின் போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சி கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி சமாதானத்தை வலியுறுத்தி அதற்கான நடைமுறை விடயங்களை முன்வைத்து மத்திய அரசுடன் இணக்க அரசியலை மேற்கொண்டபோது எம்மை துரோகப்பட்டம் சூட்டி நீங்கள் இன்று உங்களது தேவைகளுக்காக மத்திய அரசுடன் இணக்கமான நிலைமைகளை கொண்டிருப்பதனால் நாம் முன்வைத்த தமிழ் மக்களுக்கான விடயங்களை நீங்கள்தான் கொண்டுவந்ததாக தமிழ் மக்களிடம் பொய்கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போல தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்படும் வாக்குறுதிகளை  தேர்தல் முடிவுற்றபின்னர் காற்றில் பறக்கவிடும் செயற்பாடுகளை எமது கட்சி என்றும் செய்தது கிடையாது. நாட்டின் சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் வலியுறுத்தியபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இன்று நீங்கள் தான் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பாடுபட்டதாக தெரிவிப்பது வெட்கமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்

Related posts: