நல்லாட்சி அரசு கோவில் உண்டியலுக்கும் வரி விதிக்கும் – மகிந்த குற்றச்சாட்டு!

Thursday, March 28th, 2019

நல்லாட்சி அரசாங்கம் கோவில் உண்டியலுக்கும் வரி அறவிடும் அளவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. வீடுகளில் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

அதிக வரி காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

கோவில்கள் விகாரைகள் போன்றவற்றின் நிதிக்கும் வரி அறவிடும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: