நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மகிந்தவை பிரதமராக நியமித்தேன்  –  ஜனாதிபதி!

Tuesday, October 30th, 2018

நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தௌிவு படுத்தும் நோக்கில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், மற்றும் ஆணையாளர்களை ஜனாதிபதி நேற்றைய தினம் சந்தித்திருந்தார்.

நாட்டில் நிலவிய அரசியல் தளம்பல் நிலையை சீர் செய்யும் வகையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: