நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணைகளின் பெறுபெறுகள் அனைத்தும் அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றன – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நல்லாட்சி அரசில் குற்றவியல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டதோடு அவை அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றவை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதானியும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015 இன் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பேரவையில் விடயங்களை முன்வைத்தபோது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்துள்ளார்.
முஸ்லிம்களிடையே அமைதியின்மை ஏற்படலாம் என தெரிவித்து அதனை அவர் எதிர்த்ததாகவும் அதன் பின்னர் பிரிகேடியர் சுரேஷ் சலேவை இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்றுமாறு பிரதமர் ரணிலும் மற்றொரு அமைச்சரும் அழுத்தம் கொடுத்ததாகவும் மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார்.
இதேவேளை, நாளை புதன்கிழமையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|