நர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுவதாயின் அரசு தேவையில்லை – முன்னாள் நிதி அமைச்சர் !

Wednesday, April 4th, 2018

சர்வதேச  நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவதாயின் நாட்டுக்கு அரசு அவசியமில்லை. பன்னாட்டு நாணய நிதியத்தின் பிரகாரம் வரி அறவிட இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை ஐக்கிய தேசியக் கட்சிப் பணியகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நான் நிதி அமைச்சராக இருக்கும் போதே வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய வரிக்கொள்கை முற்றிலும் வேறுபட்டது.

இந்த வரி அறவீடு அனைத்துத் துறையின் மீதும் பாதிப்புச் செலுத்தும். வரிக்கொள்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

வெளிநாட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவசியமில்லை. அப்படியாயின் நாட்டுக்கு அரசு அவசியமில்லை. இதற்கு மத்திய வங்கியே பொறுப்புக் கூற வேண்டும். பன்னாட்டு நாணய நிதியத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு மத்திய வங்கி அதிகாரிகள் பொறுப்புகளை மறந்து செயற்படுகின்றனர்.

ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை. மத்திய வங்கியில் அதிகாரிப் பூதங்கள் தொடர்ந்தும் உள்ளன. மத்திய வங்கிக்குத் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். தற்போது நாட்டின் கடன் 1 வீதமாக அதிகரிப்பது என்பது 6000 கோடி பெறுமதியாகும். அது பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கும். என்றார்.

Related posts: