நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை – வேலணை பிரதேச சபை தவிசாளர்!

25 Wednesday, May 16th, 2018

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவில் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 2018.06.14 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளதால் உற்சவ காலங்களில் ஆலய சூழல் மற்றும் வெளியில் தனியார் காணிகள் என்பவற்றில் வியாபார நிலையங்களை நடாத்துவோர வேலணைப் பிரதேச சபையின் முறையான முன் அனுமதியினை உரிய கட்டண அறவீடுகளைச் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

நயினாதீவு ஆலய உற்சவகாலத்தில் ஆலய சூழலில் நடமாடும் வியாபாரம் செய்வோர் மற்றும் ஐஸ்கிறீம் (வான்) விற்பனை, கடலை, கச்சான் விற்பனை, இனிப்புப் பண்ட விற்பனை முதலான சகல விற்பனை நடவடிக்கைகளுக்கும் தண்ணீர் பந்தல் அமைப்போர், குடிநீர் விநியோகம் செய்வோர் போன்றவர்களும் உரிய அனுமதியினைப் பெற்றே தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குறித்த உற்சவ காலங்களில் மதுபான, சிகரட், கஞ்சா, வெற்றிலை, பாக்கு, பொலித்தீன் பாவனை முதலானவை ஆலய சூழலிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆலய உற்சவ காலங்களில் குறித்தொதுக்கப்பட்ட சகல வியாபார நடவடிக்கைகளிற்கும் உரிய முறையான முன் அனுமதியினை வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

அனுமதியற்ற வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுவது தொடர்பில் வேலணை பிரதேச சபையினால் நடவடிக்கை தொடரப்படும் என்பதனையும் கவனத்தில் கொண்டு சபையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு வேலணை பிரதேச சபை அன்பாக கேட்டுக்கொள்கின்றது.

32547651_1768655023173577_5489550666277847040_n (1)


அடுத்த கல்விஆண்டுக்கான பாடசாலைத் தவணைகள் குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!
சீரமைப்பு பணி: இரு மணி நேரம் தடைப்படும்  119 அழைப்பு !
புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் கோரிக்கை!
ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் - உன்...
அனுமதித்தது இந்தியா: மகிழ்ச்சியில் வடபகுதி பக்தர்கள் !
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!