நயினாதீவு மக்களின் கனவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு!

நயினாதீவு பகுதி மக்களிடையே நீண்டகாலமாக இருந்துவரும் குறைபாடான நிரந்தர பொதுச் சந்தை கட்டட நிர்மாணம் தொடர்பான பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு காணப்பட்டது.
நயினாதீவு மக்களது உற்பத்தி பொருட்களை வியாபாரம் செய்தல் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நிரந்தரமான ஒரு கட்டடத் தொகுதி இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலர் கருணாகரகுருமூர்த்தியூடாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனடிப்படையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சி காரணமாக உள்ளாட்டலுவல்கள் அமைச்சினூடாக 30 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டு குறித்த சந்தை கட்டட நிர்மாணத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் நயினாதீவில் அமைந்துள்ள வேலணை பிரதேச சபையின் உப அலுவலக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலருமான நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
குறித்த ஆலோசனை கூட்டத்தில் வேலணை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|