நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !

Monday, May 10th, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்று வந்த அபிஷேகங்கள் மற்றும் தினசரி அன்னதானம் என்பவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: