நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் பணிகளை தொடர்வோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் !

Saturday, May 23rd, 2020

முடியும் என்ற நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் மத்தியில் பணிகளை மேற்கொள்வோமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வது கடினமானது இல்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் இப்பகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்களால் எமது மக்கள பல துன்பங்களை எதிர்கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.

அவற்றை எல்லாம் துடைத்து தமிழ் மக்கள் நிம்மியாக வாழவேண்டும் என்பதில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாம் அயராது உழைத்து வருகின்றோம்.

வன்னி மக்கள் தற்போது தாம் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்துள்ளனர். அந்தவகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை வன்னி மாவட்டத்திலும் எமது கட்சியின் பிரதிநிதித்துவம்  சாதியமாகும் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: