நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை என்று நம்புவதாக மீன்பிடி மற்றும் நீர்வள மூல அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானம் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தனக்குத் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பாக, முதலாவதாக முறைப்பாடு செய்தவன் நானே. இது தொடர்பாக, இன்று பலரும் உரிமை கோருகின்றனர். ஆனால், என்னாலேயே முதலாவதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் கூறவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
புத்தாண்டுக்கான ஒற்றுமை வலுப்படுத்தி இலங்கை வந்தடைந்த 'ரன்விஜய்' கப்பல்!
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
|
|