நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Wednesday, February 24th, 2021

நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவாலை நாம் முறியடித்தே தீருவோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச புதிய பிரேரணையையும் வலுவிழக்கச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் – எமது நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது. ஆனால், எமது நாட்டிலுள்ள தமிழ் கட்சியினர் உள்ளிட்ட எதிரணியினர் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோக நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டாது. எமது நாடு இறைமை உள்ள நாடு என்பதை நாட்டுக்கு எதிராக துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: