நடைமுறையில் எந்தவித தளர்வுப்போக்கும் ஏற்படுத்தப்பட மாட்டாது – இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, May 23rd, 2021

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அன்று இரவு 11 மணிமுதல் மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைவிட, 28 ஆம் திகதியிலிருந்து மீண்டும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான நடமாட்டக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என்றும், 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 அதிகாலை வரையான தினசரி இரவுநேர நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: