நடைமுறைக்கு வந்தது புகையிரத நிலையங்களில் யாசகத் தடை!

Monday, December 2nd, 2019

புகையிரதங்களில் யாசகம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அதனை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் புகையிரதநிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் புகைரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தொடரூந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்றுமுதல் இவ்வாறான நடவடிக்கைகளில்ஈடுபடுவோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வரவேற்பு !
400 கிராம் பால்மாவின் நிர்ணய விலை 295 ரூபா!
2017ல் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் -நிதியமைச்சர்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு!
உயிரைப் பணயம் வைத்து தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – ஜனாதிபதி!