நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, September 6th, 2020

நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு எச்சரித்துள்ளது;

இன்றையதினம் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

அந்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்தாவது –

நடைப்பாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பபதனால் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும், முறையற்ற விதத்தில் நடைப்பாதைகளில் வாகனங்களை நிறுத்துவதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: