நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ் தெரிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கான புதிய மாற்றத்தினை ஏற்படுத்தப் போகின்றது – அந்த மாற்றதை மக்களாகிய நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என்பதை இங்கு கூடியிருக்கின்ற கூட்டம் கட்டியம் கூறிநிற்கின்றது என ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விகனேஸ் நம்பி்க்கை தெரிவித்துள்ளார்.
பளை நகர் பகுதியில் அமைச்சர் டகஸ் தேவானந்தா கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் ஏற்படுத்தப் போகின்ற மாற்றம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்பதுடன் அதனுடாக உங்களுக்கு வளமான எதிர்காலத்தையும் உருவாக்கும்.
அந்தவகையில் நம்பிக்கையுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள் – வீணைக்கு புள்ளடியை இடுங்கள் என்று ஈ.பி.டி.பி. யாழ். மாவட்ட வேட்பாளர் விகனேஸ் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|