நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவிப்பு!

வலி. தெற்கு வணிகர் கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை( 25-03-2016) முற்பகல் -10 மணி முதல் வணிகர் கழகத் தலைவர் லயன் சி. ஹரிகரன் தலைமையில் வலி. தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வலி . தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தி. சுதர்சன் தெரிவித்ததாவது,
நாம் நடைபாதை வியாபாரத்தை அகற்றுவது தொடர்பாக உடனடியாகப் பொலிஸாருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல்களை வழங்குகின்றோம். நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது. எமது வியாபாரிகள் பண்டிகைக் கால வியாபாரத்தில் மக்களுக்கு ஏற்ற வகையில் பொருள்களைக் குறைந்த வகையில் வழங்க முன் வர வேண்டும். அடுத்த வருடத்திலிருந்து வியாபார உரிமம் வழங்கப்படும் போது வர்த்தக சங்கத்தின் சிபாரிசு இருந்தால் மட்டுமே உரிமம் எம்மால் வழங்கப்படும். அத்துடன் வர்த்தக சங்கத்தின் அலுவலகத்திற்குச் சுன்னாகம் சந்தைக் கட்டடத் தொகுதியில் மேல் மாடியிலுள்ள ஒரு கட்டடத்தை வழங்குகின்றோம்.
நடைபாதை வியாபாரம் அகற்றுவது தொடர்பில் எம்முடன் சேர்ந்து செயற்பட ஐவர் கொண்ட குழு ஒன்றையும் நியமியுங்கள். உங்களுக்கு எம்மாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|