நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆமலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீள் உருவாக்கும் சக்தியை மேம்படுத்தி, சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சுற்றாடலுக்கு காபனை வெளியிடுவது, அசேதன பசளைப் பாவனை, அதிக மின்சார பயன்பாடு என்பன தற்சமயம் உயர்வடைந்துள்ளன என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு புதியதிட்டம் ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுளம்பு பெருக்கம்: மூவருக்கு தண்டம்!
தீப்பிடித்த கப்பலில் வெடிபு - ஊழியர் ஒருவர் பலி!
279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது - பதில் நிதியமைச்சர் ரஞ்சித்...
|
|