நடுக்கடலில் கவிழ்ந்துள்ள படகு 90 பேர் உயிரிழப்பு – லிபியாவில் சோகம்!

Tuesday, April 5th, 2022

லிபியாவிலிருந்து படகொன்றில் சுமார் 100 பேர் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை குறித்த படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

குறித்த படகு விபத்தில் 90 பேர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அந்த படகு நடுக்கடலில் சுமார் நான்கு நாட்கள் நின்றிருக்கிறது. அதில் இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக படகில் இருந்து கடலில் குதித்துள்ளனர்.

அதன்போது குறித்த படகு அப்படியே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் அதில் சிக்கி கொண்டவர்கள் உயிருக்காக போராடியுள்ளார்கள்.

இதுபற்றி அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர...
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது பிரதேசத்தின் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்படுவது அவச...
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் - சுகாதார...